இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியினருக்கு குரு 2வது மற்றும் 5வது வீட்டிற்கு இல்லத்து அதிபதி ஆவார். 2வது வீடு நல்ல இடமும் இல்லை கெட்ட இடமும் இல்லை. 5வது வீடு திரிகோணம் எனப்படும் மிக நல்ல ஸ்தானம். இது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாயும் குருவும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். ஆகவே குரு விருச்சிக ராசியினருக்கு மிகவும் வலிமையுள்ள யோகம் தரும் கிரகமாகும். விருச்சிக ராசியினருக்கு குரு நல்ல இடத்தில் இருந்தால் தான் யோகமாகும். துர் ஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது வலிமை இழந்து விட்டாலோ குருவால் கிடைக்க வேண்டிய அணைத்து பலன்களும் பாதிப்பு அடைந்து விடும். இப்பொழுது குரு பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவ...