Skip to main content

2013 Rasi Palan: குரு பெயர்ச்சி பலன்கள் (விருச்சிக ராசி)


இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 

விருச்சிக ராசியினருக்கு குரு 2வது மற்றும் 5வது வீட்டிற்கு இல்லத்து அதிபதி ஆவார். 2வது வீடு நல்ல இடமும் இல்லை கெட்ட இடமும் இல்லை. 5வது வீடு திரிகோணம் எனப்படும் மிக நல்ல ஸ்தானம். இது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாயும் குருவும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். ஆகவே குரு விருச்சிக ராசியினருக்கு மிகவும் வலிமையுள்ள யோகம் தரும் கிரகமாகும். 

விருச்சிக ராசியினருக்கு குரு நல்ல இடத்தில் இருந்தால் தான் யோகமாகும். துர் ஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது வலிமை இழந்து விட்டாலோ குருவால் கிடைக்க வேண்டிய அணைத்து பலன்களும் பாதிப்பு அடைந்து விடும். 

இப்பொழுது குரு பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மேலும் மிதுன ராசி விருச்சிக ராசிக்கு 8வது இடம் ஆகும். 8வது ஸ்தானம் என்ற அட்டம ஸ்தானம் மிக கொடிய ஸ்தானம் ஆகும். ஆகவே குரு வலு இழப்பது மட்டும் இல்லாமல் மிக மோசமான ஓரு இடத்திலும் உள்ளது.

இந்த வருடத்தில் குரு பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கு அவ்வளவாக நல்ல பலன்களை தருவதற்கு வாய்ப்பில்லை. கெட்ட பலன் தராமல் இருந்தாலே மிகவும் புண்ணியம் என்று நினைக்க வேண்டும். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.

31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

பண சம்பந்த பட்ட விஷயங்கள் சற்று அதிருப்தி தந்தாலும் சற்று தாமதமாகி நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வரும் சில பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். கொடுத்த வாக்கினை சற்று சிரமப்பட்டு காப்பீர்கள். பிள்ளைகள் விசயத்தில் முன்னேற்றமான பலனை எதிர் பார்க்கலாம். மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப பெரியவர்களிடம் இருந்து வரும் வேற்றுமை குறைய வாய்ப்பு உண்டு.


08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் விருச்சிக   ராசி மற்றும் விருச்சிக இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.

இக்காலத்தில், பண நெருக்கடி உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விசயத்தில் மிகுந்த கவனம் தேவை.  குடும்பத்தில் கடுமையான அதிருப்தி உண்டாகும். நிதானத்துடன் பேசவில்லை என்றால் விருச்சிக ராசியினரின் பேச்சு பிரச்சினைகளை மேலும் சிக்கல் ஆக்கி விடும். பிள்ளைகள் விசயங்களில் நிதானத்துடன் செயல் படவும். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

பண விஷயங்கள் சற்று சாதகமான பலனை அளிக்கும். குடும்பத்தில் இது வரை இருந்து வந்த மன வருத்தங்கள் மாறி முன்னேற்றமான பலனை அளிக்கும். குடும்பத்தில் அனைவரிடமும் அனுசரித்து நடந்து செல்ல முற்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்ற பாதையில் செல்வார்கள். 

13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

விருச்சிக ராசியினர் பண விசயத்தில் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகலாம். குடும்ப சம்பந்த பட்ட விசயங்களில் எதையும் யோசித்து நிதானமாக பேசுவது மற்றும் செயல் படுவது உத்தமம். அல்லது குடும்பத்தில் பிரச்சினைகள் அளவுக்கு அதிகமாக தோன்ற வாய்ப்பு உண்டு. யோகங்கள் சரியான நேரத்திற்கு யோகங்கள் கை விட்டு போய் விடும். மாணவர்கள் சற்று குடுதலான நெருக்கடியை சந்திப்பார்கள். 

30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

விருச்சிக ராசியினரின் எதிர் பார்த்த தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் குடும்பம் மற்றும் பண விசயங்களில் தீர்வை நீக்கி செல்ல ஆரம்பிப்பார்கள். பேச்சில் சற்று நிதானம் தென்படும். இந்த காலத்தில் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரவில்லை என்றாலும் சற்று சாதகமான நிலை ஏற்படும். 

15.08.2013 முதல் 23.09.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

இந்த காலத்தில் விருச்சிக ராசியினரின் நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பண பரிவர்த்தனை சாதகமாக அமையும். குடும்பத்தில் இது வரை இருந்து வந்த குழப்ப சூழ்நிலை மாறி நம்பிக்கையுடன் செயல் பட ஆரம்பிப்பீர்கள். பிள்ளைகள் மற்றும் பெரியவர்களிடம் இது வரை இருந்து வந்த இடைவெளி குறையும். மாணவர்கள் மீண்டும் உற்சாகத்துடன் செயல் பட தொடங்குவார்கள். 

23.09.2013 முதல் 08.11.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

விருச்சிக ராசியினர் குடும்ப மற்றும் பண விசயங்களில் தடைகளை சந்திக்க வாய்ப்புண்டு. யோசித்து நிதானமாக செயல் பட்டால் பிரச்சினைகளுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். மாணவர்கள் சில நேரம் சோர்வடைய வாய்ப்பு உண்டு. இந்த காலம் சில நேரங்களில் சாதகமற்ற பலனை தரலாம். 

8.11.2013 முதல் 21.02.2014 முடிய  குரு  பெயர்ச்சியின் பலன்கள்:

குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.


விருச்சிக ராசியினரின் கவனத்திற்கு:

1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது. 

2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.

3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.

4. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.

5. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.

6. விருச்சிக ராசியினருக்கு 2வது, 6வது, 12வது  வீட்டு கிரகமோ அல்லது குருவோ திசையை நடத்தி அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்து திசையை நடத்தினால் கண்டிப்பாக பெரிய அளவு பண நெருக்கடி உண்டாகும்.

7. விருச்சிக ராசியினருக்கு 2வது, 7வது, 9வது கிரகத்தின் திசையோ அல்லது குரு அல்லது சுக்கிரனுடைய திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் குடும்ப பிரச்சினை தலை தூக்கி நிற்கும். 

8. விருச்சிக ராசியினரின் பிறந்த ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராஹு அல்லது சூரியன் துர் ஸ்தான அதிபதியாய் இருந்து 2ம் வீட்டின் தொடர்பு ஏற்பட்டு திசையை நடத்தினால் இவர்கள் பேசும் பேச்சினால் குடும்ப விசயங்களிலோ அல்லது பண விசயத்திலோ பெரும் துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.

9. விருச்சிக ராசியினருக்கு 5வது வீட்டு கிரகமோ அல்லது குருவின் திசையை நடத்தி, அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் பிள்ளைகள் பெறுவதிலோ அல்லது பிள்ளைகளால் துன்பம் அடைய நேரிடும். 

10. விருச்சிக ராசி மாணவர்களுக்கு 4வது, 5வது அல்லது புதனுடைய திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் படிப்பில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புண்டு.

11. விருச்சிக ராசியினர் 6வது அல்லது 8வது வீட்டின் திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

12. குருவின் பலமற்ற பார்வை 12வது, 2வது மற்றும் 4வது வீட்டில் விழுகின்றது.  எந்த நிலையிலும் பண விஷயங்கள் சற்றே கட்டுக்குள் இருக்கும். 

13. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும். 

குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள். மேலும் உங்கள் ஜாதகத்தை சரியாக கணிப்பதற்கு Author Meganathan. G ஐ தொடர்பு கொள்ளுங்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் Pay Pal மூலம் பணம் செலுத்தி ஜாதகம் பற்றிய முழு விபரங்களை பெற்று கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

2014 - 2017 SHANI SADE SATI FOR VIRUCHIKA RASI

2014 - 2017 Shani Peyarchi Palangal for Viruchika Rasi (Scorpio sign): The Viruchika Rasi (Scorpio sign) natives would come under the influence of Janma Shani, when the Shani enters the Viruchika Rasi during the mid 2 1/2 years period of 7 1/2 years of Shani Sade Sati. What does the Viruchika Rasi (Scorpio sign) natives could expect from the "Janma Shani" for the next 2 1/2 years?. Let us find the probable results for the Viruchika Rasi (Scorpio sign) natives during the next Shani transit periods. Importance of Sani: Among all the 9 planets, the Shani moves very slowly taking nearly 2 ½ Years to cross a single Zodiac sign. If the position of the Shani is favourable and gets stronger strength, then the 2 ½ year’s period remain comfortable. But on the other hand, if the Sani remains in a malefic house and gets poor strength, then it will make the natives's life treacherous for the entire 2 ½ Years period. That is, the longer transit period of the Shani is the main r...

2024 SEPTEMBER SCORPIO CAREER HOROSCOPE

2024 August Scorpio Financial Astrology 2024 September Vrischik Rasipalan For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Good progress can be expected during the entire month of September 2024. Work Efficiency: Good & stable efficiency can be expected from 1 st to 16 th September 2024. Delays or mixed efficiency can be expected from 17 th to 30 th September 2024. Income from Investments: Stable returns are possible from 1 st to 4 th ; and from 18 th to 26 th September 2024. Erratic returns are possible from 5 th to 17 th September 2024. For Business Peoples: Sales & Marketing: Good progress & stable sales can be expected during the entire month of September 2024. Productivity: Stable production levels are possible from 1 st to 16 th September 2024. Delays in production are possible from 17 th to 30 th September 2024. Profits & Payment collections: Stable profits & good payment collections are possible f...

MARRIAGE TROUBLES FOR VIRUCHIKA LAGNA

Planetary position that indicates Marriage troubles for the Viruchika Lagna (Scorpio Rising) natives: 1. The Guru and/or Venus getting placed in the Capricorn, Aries, Gemini, Cancer and Libra. 2. The presence of  Shani, Budhan and/or Moon in the Sagittarius and the Taurus. 3. The association of Venus with the Mars and/or Budhan in any zodiac signs. But the placement in Capricorn, Aries, Gemini. Cancer and Libra would be devastating. 4. The Parivartana Yoga (interchange of houses) between Venus or Guru with the Shani or Budhan or Moon. 5. The Venus getting placed in the Virgo in the Navamsa chart. Also Venus getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 6. The Guru getting placed in the Capricorn in the Navamsa chart. Also Guru getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 7. The Guru and/or Venus traversing in the 22nd Nakshatra or 88th path from the natives Jenma Nakshatra. 8. The Venus and/...